பரிகாரங்கள்

தருமை ஆதீன அருளாட்சியில் உள்ள தேவஸ்தானங்களில் ஒன்றான

ஸ்ரீ அருணஜடேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்
திருப்பனந்தாள் - 612 504. திருவிடைமருதூர் தாலுகா
தஞ்சை மாவட்டம். போன்: 04352 - 456422

திருப்பனந்தாளில் மேற்கொள்ள வேண்டிய பரிகார வழிபாடுகள்

நாக தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷங்கள் நீங்க...

ராகு காலங்களில் பால் அபிஷேகம் இயன்ற போது செய்ய வேண்டும். பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் பதினோரு வாரங்களும் ஆண்கள் திங்கட்கிழமைகளில் பதினோரு வாரங்களும் தொடர் வழிபாடு மேற்கொள்ளுதல் வேண்டும்.

மற்ற நாட்களிலும் செய்யலாம்.

கட்டணம் ரூ.750/-

சந்திரதோஷம் நீங்க...

திங்கட்கிழமைகளில் பொய்கை குளத்தில் நீராடி இறைவழிபாடு செய்வதும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசிகளில் வழிபாடு செய்வதும் அவசியம். அபிஷேகம் செய்வதும் விசேஷம்.

கட்டணம் ரூ.1750/-

சூரிய தோஷங்கள் நீங்க...

சூரியன் மீன மாதத்தில் சிவனை வழிபட்டு தோஷ பரிகாரம் பெற்றான். எனவே பங்குனி மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாடு ஆற்றுதல் வேண்டும்.

கட்டணம் ரூ.1750/-

சகல தோஷங்களும் நீங்க...

பிரம்மனுக்கு பொய் சொன்னதால் ஏற்பட்ட மிகப் பெரிய தோஷத்தை ஆவணி மாதத்து அமாவாசையில் நீக்கினான் சிவபெருமான். ஆவணி அமாவாசையில் பொய்கை குளத்தில் நீராடி செஞ்சடையப்பரை வழிபட்டு அஜனீஸ்வரர் எனப்படும் ஊருடையப்பருக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி பால் அபிஷேகம் செய்து பதினோரு அமாவாசைகள் வழிபாடாற்ற எல்லாப் பாதகங்களும் அகலும்.

குருதோஷங்கள் அகல...

பங்குனி உத்திர நாளில் செஞ்சடையப்பர் பார்வதிக்கு ஞானோபதேசம் செய்தார். இது சம்பிரதாய விழாவாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தில் வழிபாடாற்றி பதினோரு வாரங்கள் வழிபட குருதோஷங்கள் அகலும்.

தலம், அம்பாள், முருகன், தட்சிணாமூர்த்தி, நவக்ரஹ குருவுக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது.

நாக தோஷம் நீங்க...

நாக தோஷம் நீங்க நாகக் கன்னிகை வழிபாட்டை முறைப்படி செய்வதுடன் கார்த்திகை வெள்ளிகளில் நாகக்கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபாடாற்ற வேண்டும். அம்பாள் முதல் வெள்ளியில் தீர்த்தவாரி நிகழ்த்துவார். அதில் பங்கேற்று பரிகாரம் பெற வேண்டும்.

வழிபாடுகள் செய்யவும், யாகம் அபிஷேகங்கள் செய்யவும், பரிகாரங்கள் புரியவும் தொகை அனுப்புபவர்கள்:

கண்காணிப்பாளர், ஸ்ரீஅருணஜடேஸ்வரர் தேவஸ்தானம்

என்ற பெயரில் அனுப்ப வேண்டும்.

⇭⇭⇭