பனசை


  •  வாழ்க்கையைக் கடலோடு ஒப்பிடுவார்கள். சமுத்திரம் என்பார்கள். கடலில் அலைகள் ஓய்வதில்லை. எப்போதும் சஞ்சலம். அதனால்தான் மனித வாழ்க்கையைக் கூடக் கடலோடு ஒப்பிடுகிறார்கள்.
  • வாழ்க்கையாகிய கடலை நீந்திக் கடக்க வேண்டும். புணை (படகு) இருந்தால் கடந்து விடலாம். எந்தப் படகு, வாழ்க் கைக் கடலைக் கடக்க உதவும் என்று வள்ளுவனிடம் சென்று ஒருவன் வழிகேட்டான். இறைவன் திருவடி என்கின்ற தெப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துவிட்டால் வாழ்க்கை யைக் கடந்து விடலாம்; பிறவியை அறுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார் அவர்.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் ஏராளமான எதிர்பார்ப்புகள். செல்வத்தில் செழிக்க வேண்டும்; கல்வியில் சிறக்க வேண்டும்; அழகாக இருக்க வேண்டும்; ஞானம் கிடைக்க வேண்டும்; உயர் பதவிகள் வேண்டும். இப்படி ஏராளமான ஆசைகள்.

  • இந்த எல்லா ஆசைகளையும் ஒரே இடத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். எல்லாவற்றையும் ஓரிடத்திலேயே பெற்றுவிட முடியும். இப்படிப்பட்ட பேறுகளை ஒவ்வொருவருக்கும் அந்தத் தெய்வம் வழங்கியிருந்தால் எல்லாவற்றையும் அவரிடம் கேட்கலாம். கேட்க வேண்டிய முறைப்படி கேட்டால் தரக்கூடியவர்தான் கடவுள். அவர் பெரும் கருணை படைத்தவர். வாரிக் கொடுக்கும் வள்ளல்.
  • திருப்பனந்தாளில் கோயில் கொண்டிருக்கிறார் அருணஜடேஸ்வரர்.
  • அவர் பிரம்மனுடைய சாபத்தை நிவர்த்தி செய்து அவனுக்குரிய பதவியையும், பெருமையையும் திரும்பத் தந்தவர்.
  • பசியோடு வருந்தி வந்த காளமேகப் புலவனுக்குச் சிவாச்சாரியார் வடிவத்தில் வந்து அன்னத்தை அளித்தவர்; பசிதீர்த்த பரமன்.
  • அழகும், பெருமையும் இழந்து, தேய்ந்து, சிறுத்துப் போய், குருவின் மனைவியை விரும்பிய சந்திரனுடைய சாபத்தைத் தீர்த்துப் பொலிவும், பெருமையும் தந்தவர்.
  • அனைத்தும் அறிந்த அன்னை பார்வதி தேவி திருவைந்தெழுத்தின் பெருமையை அறிய விரும்பினாள். அவளுக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஞான குருவாக இருப்பவர் செஞ்சடையப்பர். குருவாய் இருந்து குருதோஷ நிவர்த்திகளைச் செய்பவர் அவர்.
  • திருமணத் தடை அகற்றி மக்கட்பேற்றினை அருளும் மகேஸ்வரன் அவர்.
  • இப்படிப் பல்வேறு பாக்கியங்களை அள்ளித் தந்தவர். திருப்பனந்தாளில் எழுந்தருளியுள்ள பிரகன்நாயகி சமேத அருணஜடேஸ்வரர் என்கிறது தல புராணம். செஞ்சடை வேதிய தேசிகரால் எழுதப்பட்ட அருமையான புராணம் இது.
பனசை குறித்த பெருமைகளை  கீழ்க்காணும் லிங்குகளை
 கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

⇭⇭⇭