பணிகள்

பேராசியர் கா.ம.வேங்கடராமையா - அன்னபூரணி
நினைவு அறக்கட்டளை
1, மூன்றாம் தளம், 91, திருமங்கலம் சாலை,
வில்லிவாக்கம், சென்னை - 49.

நோக்கங்கள்

பேராசிரியர் கா.ம.வே. அவர்களின் நூல்களைப் பதிப்பித்தல். [பேராசிரியரைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்...Click Here!]
கல்வெட்டு வரலாறு தொடர்பான கருத்தரங்கள் நடத்துதல்.
சமய மரபுகளை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் ஆய்ந்து நிறுவுதல்.
திருப்பனந்தாள் உள்ளிட்ட தலங்களில் திருக்கல்யாணம் முதலிய திருவிழாக்களை நடத்துவதில் பங்கேற்றல் - தல வரலாற்று நூல்களை வெளியிடுதல் - இணைய தளம் அமைத்தல்.
ஆலய நந்தவனங்களை அமைத்தல் - பராமரித்தல் - சுற்றுச்சூழல் மேம்பட உதவுதல்.

ஆற்றியபணிகள்

பேராசிரியரின் புதல்வருள் ஒருவரான புலவர் வே.மகாதேவனின் உக்ரரத சாந்தி விழா நாளில் 20.1.2009 ‘சிவநெறிச் செல்வரின் செந்தமிழ்ப் பணிகள்’ என்ற நூல் திருக்கடையூரில் வெளியிடப்பட்டது. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம் அதிபர் கயிலை மாமுனிவர் வெளியிட தினமலர் ஆர்.ஆர். கோபால்ஜி முதல் பிரதி பெற்றுக் கொண்டார்.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 2008 -ம் ஆண்டு முதல் திருக்கல்யாண விழாவை விமர்சையாக நடத்துதல். அந்த நாளில் சுவாமிக்குக் காலையில் ஏகாதச ருத்ர ஹோமமும் மகாபிஷேகமும் செய்வித்தல். மதியம் பெரிய அளவில் பிரசாத விநியோகம் செய்தல். இரவு கன்யா பூஜை - சுமங்கலி பூஜை செய்தல். ஆலயப் பணியாளர் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்குதல் ஆகியவை ஆண்டுதோறும் நிகழ்ந்தன.

திருப்பனந்தாள் ஸ்தல மகான்மியம் என்ற நூல் 2008 மற்றும் 2010-ல் அச்சிட்டு ஆலயத்திற்களிக்கப்பட்டது. இதன் விற்பனைத் தொகை கொண்டு திருக்கல்யாண சாஸ்வத நிதி உருவாக்கப்பட்டது. 2009-ல் பனசை பெரிய நாயகி மாலை என்ற நூல் பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்களின் உரையுடன் அச்சிடப்பட்டு இலவசமாக வழங்கப்பெற்றது.

2009 பிப்ரவரி முதல் 2010 ஜனவரி வரை புலவர் வே.மகாதேவனின் மணிவிழாவை ஒட்டி மாதந்தோறும் மணிவிழா நூல் மலர்கள் வெளியிடப்பட்டன. இவ்வெளியீட்டு விழாக்களில் பேராசிரியரிடம் தமிழ் பயின்ற மாணவருள் சிலர் நினைவுரையாற்றினர். அவ்வுரைகள் அனைத்தும் ‘செந்தமிழ்க் கலாநிதி’ என்ற பெயரில் நூலாகத் தொகுத்து அச்சிடப்பட்டன. புலவர். வே. மகாதேவனின் மணிவிழா நிறைவு நூல் வெளியீடுகளில் ஒன்றான இந்த நூலை மதுரை ஆதீனகர்த்தர் வெளியிட்டார். 6.2.2010 அன்று மாலை மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பேராசிரியரின் நூற்றாண்டுத் தொடக்க விழா அன்று சென்னை கன்னிமாரா நூலக வளாக அரங்கில் நடைபெற்றது. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து இணையதிபர் ஆசியுரை வழங்கிய இவ்விழாவில் பேராசிரியர் படத் திறப்புவிழாவும் ‘தமிழ் மாமுனி’ என்ற நூல் வெளியீட்டு விழாவும் நிகழ்ந்தது. தமிழக தொல்லியல்துறை மேனாள் இயக்குநர் திரு.ஆர். நாகசாமி, பேராசிரியர் அறிவுடைநம்பி முதலியோர் பங்கேற்றனர். பேராசிரியரின் படத் திறப்புவிழா நிகழ்ந்தது.

ஜனவரி 31 பேராசிரியரின் நினைவு நாள். ஜனவரி 30, 2011-ல் ‘தமிழ்மாமணி’ என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியர் கா.ம.வே. அவர்களின் ஆய்வு நூல் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது. ஏப்ரல் 14 அன்று இணையதள நிறுவுதல் விழா நடைபெறவுள்ளது.

வரும் ஏப்ரல் முதல் ‘சாசனம்’ என்னும் பெயரில் ஓராய்விதழ் மாதந்தோறும் மலர உள்ளது. பேராசிரியரின் நூற்றாண்டு விழா நினைவாக வெளியிடப்படவுள்ள இந்த இதழ் இணைய இதழாகவும் மலரும்.

⇭⇭⇭